ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எழுவர் கைது

1 mins read
e00aa9e5-ff11-4db8-b803-203ca7cd806f
படம்: டுவிட்டர், ஹாங்காங் போலிஸ் படை -
multi-img1 of 2

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடப்புக்கு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலிசார் குறைந்தது எழுவரை நேற்று கைது செய்தனர்.

ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கும் விதமாக ஏராளமானோர் வீதிகளில் ஆர்ப்பரித்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

காஸ்வே பே, வான் சாய் பகுதிகளில் கண்ணீர்ப் புகை குண்டு, மிளகுக் குண்டை வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கலைத்தனர். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்ட பகுதிகளை போலிசார் முடக்கினர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடியது, பாதுகாப்புச் சட்டத்தை அத்துமீறியது, போலிசாரை வழிமறித்தது, ஆயுதங்களை ஏந்தியது போன்றவற்றுக்காக 180க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.