கொத்துகொத்தாக யானைகள் மடியும் மர்மம்; யானைகளின் செயல்பாட்டிலும் மாற்றம்

தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 350 யானைகள் இறந்துவிட்டதை அந்நாட்டின் வனவிலங்குத் துறை உறுதிப்
படுத்தியுள்ளது.

ஆனால் தந்தங்கள் எடுக்கப்படாததால் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படவில்லை என்கின்றனர்.

இந்த எண்ணிக்கையில், 70 விழுக்காட்டு யானைகள் ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் எனவும் 30 விழுக்காட்டு யானைகளின் இறப்பு, இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து ஒரு நாளுக்கு முன்பு இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

வயது, பாலின வேறுபாடின்றி, பல்வேறு வயதுகளில் யானைகள் இறந்திருப்பதாகக் கூறப்பட்டது.

அந்தப் பகுதில் உள்ள மேலும் பல யானைகள் வலுவிழந்தும் தன்னிலை மாறிய வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யானைகளின் இந்த நிலைமைக்கும் யானைகள் இறப்பதற்குமான காரணத்தைத் கண்டுபிடிக்க முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!