அமைச்சர்கள்: தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் முறை மசெகவுக்கு 'வெற்று காசோலை'யாக இருக்காது

அமைச்சர்கள்: தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் முறை மசெகவுக்கு 'வெற்று காசோலை'யாக இருக்காது

2 mins read
78058cce-d452-4737-bb5b-79bc62d84cef
தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் முறையால் ஆளும் மக்கள் செயல் கட்சி, தமக்கு கிடைத்த 'வெற்று காசோலை' என்று எண்ணி, தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்று அமைச்சர்கள் இருவர் வலியுறுத்திக் கூறியுள்ளனர். படம்: எஸ்டி -

தொகுதியில்லாத நாடாளுமன்ற உறுப்பினர் முறையால் ஆளும் மக்கள் செயல் கட்சி, தமக்கு கிடைத்த 'வெற்று காசோலை' என்று எண்ணி, தான் விரும்பியதை எல்லாம் சாதித்துக்கொள்ளலாம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்று அமைச்சர்கள் இருவர் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

"தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தால் நாடாளுமன்றத்தில் மாறுபட்ட கருத்துகளும் எதிர்த்து எழுப்பப்படும் குரல்களும் ஒலிக்க வாய்ப்புண்டு.

"தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் போலவே அவர்களுக்கும் எல்லா உரிமையும் வழங்கப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜாவும் நேற்றுக் காலை பெக் கியோ சந்தைக்கு தொகுதி உலா சென்றபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு தொலைக்காட்சியில் இடம்பெற்ற தேர்தல் விவாதத்தின்போது, பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் ஜேமஸ் லிம், சிங்கப்பூரர்களை பாட்டாளிக் கட்சிக்கு வாக்களிக்கு மாறும் அதன் மூலம் மசெகவுக்கு 'வெற்று காசோலை' கிடைக்கக்கூடிய வாய்ப்பைத் தடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

புதன்கிழமை தேர்தல் விவாதத்தின்போது, செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளரான இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம்மின் கருத்தை மறுத்த குமாரி இந்திராணி, "தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் குறைந்தது 12 எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உரிமைகள்போல, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள், நிதி விநியோக மற்றும் பணம் தொடர்பான மசோதாக்கள், நம்பிக்கையில்லாத தீர்மானம் என அனைத்து அம்சங்கள் தொடர்பிலான வாக்கெடுப்பில் அவர்களும் பங்கேற்கலாம்," என்று அமைச்சர் இந்திராணி தெளிவுபடுத்தினார்.