முகைதீன் பிரதமராக நீடிக்க அம்னோ, பாஸ் கட்சி ஆதரவு

முகைதீன் பிரதமராக நீடிக்க அம்னோ, பாஸ் கட்சி ஆதரவு

1 mins read
ea31f802-670a-469c-ad4e-3883b8cffb4d
தமது அரசாங்கத்திற்குப் போதுமான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கட்சிகளின் இந்த உறுதி தமக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் முகைதீன் நம்பிக்கை தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், மலேசியாவின் பிரதமராக நீடிக்க முகைதீனுக்கு ஆதரவு வழங்குவதாக அம்னோ, பாஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஆதரவைத் திரட்டி வரும் இவ்வேளையில் தமது அரசாங்கத்திற்குப் போதுமான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கட்சிகளின் இந்த உறுதி தமக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் முகைதீன் நம்பிக்கை தெரிவித்தார்.

புத்ரஜெயாவில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளர் அன்வார் மூசா கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2023ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளது என்றாலும் அங்கு நீடிக்கும் அரசியல் குழப்பத்தால் விரைவில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.