அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 55,000 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கிட்டத்தட்ட 55,000 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த வாரம் நாடு முழுவதும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்திருப்பதால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நெருக்கடியைக் கையாளும் விதம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

பல மாநிலங்களில் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்த திட்டங்களை மாநில ஆளுநர்கள் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது.

பிரேசிலில் ஜூன் 19ஆம் தேதி ஒரே நாளில் 54,771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே ஆகப் பெரிய எண்ணிக்கையாக கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நேற்று பதிவான, கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 54,879 அதையும் மிஞ்சிவிட்டது.

இரு வாரங்களுக்கு முன்புதான், அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சுமார் 22,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், கடந்த ஏழு நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுவும், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக புதிய உச்சத்தை எட்டின.

அமெரிக்காவின் 37 மாநிலங்களில், ஜூன் மாதம் முதல் இரு வாரங்களில் பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்புநோக்க, கடந்த இரு வாரங்களாக உறுதி செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம்.

அமெரிக்காவில் கிருமித்தொற்று நிலைமை மோசமாகி வரும் வேளையில், தொற்றை முறியடிக்க பல நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.

நாட்டின் இரண்டாவது ஆகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட டெக்சஸ் மாநிலத்தில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவுக்கு அடுத்ததாக டெக்சஸ்தான் கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!