நகர மன்றத்தை நிர்வகிக்கத் தயார்: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

நகர மன்றத்தை நிர்வகிக்கத் தயார்: தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி

1 mins read
63e66fff-e0a6-4074-9c4e-9bb5abf4dcf6
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் செம்பவாங் குழுத்தொகுதி வேட்பாளர்கள் இன்று (ஜூலை 3) விஸ்தா பாயின்டில் தொகுதி உலா சென்று வாக்குகள் சேகரித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் நகர மன்றத்தை நிர்வகிக்க தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் முகம்மது ரிட்சுவான் இன்று (ஜூலை 3) தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் செம்பவாங் குழுத் தொகுதியிலும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

"எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணிகள், திறன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். நானும் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். குடியிருப்பாளர் குழுவில் முக்கிய பதவியில் இருக்கிறேன்," என்று திரு ரிட்சுவான் தெரிவித்தார்.

இருப்பினும், தங்களைப் பற்றி வாக்காளர்களிடம் தெரிவிப்பதில் சவால்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online