செய்திக்கொத்து (4-7-2020) உலகம்

இந்தோனீசியாவில் 1,301 பேருக்கு கிருமித்தொற்று; 49 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று புதிதாக 1,301 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,695ஆக அதிகரித்துள்ளது. கிருமித்தொற்றால் மேலும் 49 பேர் உயிரிழந்தனர். கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,036ஆக கூடியுள்ளது.


பிலிப்பீன்ஸ்: ஒரே நாளில் ஆக அதிகமாக 1,531 பேருக்கு தொற்று

மணிலா: பிலிப்பீன்சில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 1,531 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,336ஆக கூடியுள்ளது. கிருமித்தொற்று பாதிப்பால் மேலும் அறுவர் உயிரிழந்தனர். கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,280ஆக உள்ளது.


சீனாவில் மோசமான வெள்ளம்: 106 பேர் மரணம்; பலரைக் காணவில்லை

பெய்ஜிங்: சீனாவின் தெற்குப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் குறைந்தது 106 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயினர்.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் 15 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக ஆறுகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தால் வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மோசமான வானிலை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படுவதுடன் நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகளில் நீர்மட்டம் அபாய நிலைக்கு உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான யாங்ஷுவோ நகரில் 1,000க்கும் அதிகமான ஹோட்டல்களும் 5,000 கடைகளும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் கனமழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஹுபெய் மாநிலமும் ஒன்று. அந்த மாநிலத்தின் தலைநகர் வூஹானில்தான் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கிருமி பரவத் தொடங்கியது.


மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 1.42 டன் போதைப்பொருள் பிடிபட்டது

பேங்காக்: மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்ததாக நம்பப்படும் 1.42 டன் எடையுள்ள ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை தாய்லாந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 39 மில்லியன் ரிங்கிட் (S$12.7 மில்லியன்) எனக் கூறப்படுகிறது.

தாய்லாந்தின் நாகோன் சி தம்மராட் பகுதியில் தாய்லாந்து நாட்டவர் இருவர் இதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேங்காக்கிலிருந்து தாய்லாந்து-மலேசிய எல்லைப் பகுதியில் இருக்கும் டாக் பாய் நகருக்கு இரும்புப் பாளங்களைக் கொண்டுசெல்லும் கனரக வாகனத்தில் 35 பைகளுக்குள் அந்த போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

டாக் பாய் நகரிலிருந்து மலேசியாவுக்குள் அதனைக் கடத்திச்செல்லும் நபரிடம் இந்தப் போதைப்பொருளை அவ்விருவரும் ஒப்படைக்க இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!