மசெக பைகள் விநியோகம்; தெளிவுபடுத்திய நகர மன்றம்

1 mins read
1f6fc6f8-b45d-426e-bbe3-3339a3547078
படம்: அமிர் அபு ஆதம் / ஃபேஸ்புக் -

மக்கள் செயல் கட்சியின் சின்னத்தைக் கொண்ட பைகளை ஈஸ்ட் கோஸ்ட்-ஃபெங்ஷான் நகர மன்ற ஊழியர்கள் விநியோகித்ததைக் காட்டும் படங்கள் வெளியானதை அடுத்து அது

குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஈஸ்ட் கோஸ்ட்-ஃபெங்ஷான் நகர மன்றம் உடனடியாக விசாரணை நடத்தியது.

அந்தப் படத்தில் இருப்பவர்கள் ஈஸ்ட் கோஸ்ட்-ஃபெங்ஷான் தொகுதியில் துப்புரவுப் பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டது. அவர்கள் மக்கள் செயல் கட்சியின் பைகளை விநியோகம் செய்தபோது அவர்கள் நகர மன்றம் தொடர்பான பணிகளை செய்யவில்லை என்று நகர மன்றத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நகர மன்றத்துடன் தொடர்பில்லாத பணிகளில் ஈடு

படும்போது ஊழியர்கள் தனது சீருடையை அணியக்கூடாது என்று நகர மன்றம் கூறியது.