தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவரொட்டிகள் சேதம்: இருவர் கைது

1 mins read
9819aac8-7128-4780-ba93-ffd1f135845f
டாக் பாயிலிருந்து மலேசியாவுக்குள் அதனைக் கடத்திச் செல்லும் நபரிடம் இந்த போதைப்பொருளை அவ்விருவரும் ஒப்படைக்க இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. -

தேர்தல் சுவரொட்டிகளைச் சேதப் படுத்தியது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆடவர் இருவரை போலிஸ் கைது செய்துள்ளது.

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13க்கு அருகே மக்கள் செயல் கட்சியின் சுவரொட்டிகள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததாக நேற்று முன்தினம் போலிசுக்குப் புகார் வந்தது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்தனர்.

இம்மாதம் 2ஆம் தேதி புக்கிட் பாத்தோக் அவென்யூ 5ல் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சுவரொட்டிகளைச் சேதப்படுத்தியது தொடர்பில் 51 வயது ஆடவர் ஒருவர் கைதானார். இதேபோல, ஹவ்காங் அவென்யூ 10ல் மசெக சுவரொட்டிகளைச் சேதப்படுத்தி யது தொடர்பில் பதின்ம வயதுஇளையர் ஒருவர் போலிஸ் விசாரணைக்கு உதவி வருகிறார்.