அமெரிக்க மாநிலங்களில் அடங்காத கிருமி; பயப்படத் தேவை இல்லை என்கிறார் டிரம்ப்

அமெரிக்க மாநிலங்களில் அடங்காத கிருமி; பயப்படத் தேவை இல்லை என்கிறார் டிரம்ப்

1 mins read
6c31384f-e40a-45b2-a481-cb961773c345
சுதந்­திர தின விழா­வில் உரை நிகழ்த்­திய அதி­பர் டிரம்ப், அமெ­ரிக்­கா­வில் பதி­வாகி இருக்­கும் 99 விழுக்­காட்டு கிரு­மிச் சம்­ப­வங்­கள் 'எவ்­வி­தத்­தி­லும் ஆபத்­தற்­றவை' என்று கூறி­னார். இருப்­பி­னும் அதற்­குச் சான்­றாக எத­னை­யும் அவர் குறிப்­பி­ட­வில்லை. கொரோனா கிரு­மிச் சம்­ப­வங்­க­ளைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்­ச­னத்­துக்கு ஆளா­கி­வரும் திரு டிரம்ப், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடியாத நிலைக்கு சீனாவே பொறுப்பு என்­றார். படம்: ஏஎப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா, டெக்­சஸ் ஆகிய இரு மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்று வேக­மெ­டுத்து உள்­ளது.

இவற்­றில் மட்­டும் நேற்று முன்­தி­னம் கிட்­டத்­தட்ட 20,000 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. குறிப்­பாக, டெக்­சஸ் மாநி­லத்­தில் சனிக்­கி­ழமை தொடர்ந்து இரண்­டா­வது நாளாக தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.

அங்கு மூச்­சுத்­தி­ண­றல் கார­ண­மாக 7,890 பேர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யில் 24 மணி நேரத்­தில் புதி­தாக 238 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இம்­மா­தம் தொடங்­கியதும் முதல் நான்கு நாட்­களில் அமெ­ரிக்­கா­வின் 14 மாநி­லங்­களில் அன்­றா­டம் பதி­வா­கும் கிரு­மித்­தொற்­றின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­படி உள்­ளது.

அமெ­ரிக்கா முழு­வ­தும் இது­வரை சுமார் 130,000 பேர் கொரோன கிரு­மி­யால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். 2.8 மில்­லி­யன் பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வல் கட்­டுப்­ப­டாத நிலை­யில் வெள்ளை மாளி­கை­யில் சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக முன்­க­ளத்­தில் நின்று போரா­டக் கூடிய ஏரா­ள­மான மருத்­து­வர்­களும் சுதந்­திர தின விழா­வில் கலந்­து­கொண்டு இருப்­பது பெரும் விமர்­ச­னத்­தைக் கிளப்பி உள்­ளது.

விழா­வில் உரை நிகழ்த்­திய அதி­பர் டிரம்ப், அமெ­ரிக்­கா­வில் பதி­வாகி இருக்­கும் 99 விழுக்­காட்டு கிரு­மிச் சம்­ப­வங்­கள் 'எவ்­வி­தத்­தி­லும் ஆபத்­தற்­றவை' என்று கூறி­னார். இருப்­பி­னும் அதற்­குச் சான்­றாக எத­னை­யும் அவர் குறிப்­பி­ட­வில்லை. கொரோனா கிரு­மிச் சம்­ப­வங்­க­ளைக் கையாண்ட விதம் குறித்து கடும் விமர்­ச­னத்­துக்கு ஆளா­கி­வரும் திரு டிரம்ப், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முடியாத நிலைக்கு சீனாவே பொறுப்பு என்­றார்.