பொதுத் தேர்தலில் களமிறங்கி உள்ள ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான சியாங் பெங் வா, பைனியர் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். சிங்கப்பூரர்களுக்கு மூன்றாவது வாய்ப்பு ஒன்றும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும். இதற்கு நடுநிலையான மூன்றாவது தரப்பு தேவை என்று தான் நம்புவதாகவும் இதனால் அரசியலில் தான் நுழைந்ததாகவும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் முன்னாள் பொறியாளரான சியாங் தெரிவித்தார்.

