இந்தியா: சீன துருப்புகள் பின்வாங்குகின்றன

இந்தியா: சீன துருப்புகள் பின்வாங்குகின்றன

1 mins read
61c7ce3e-eb89-4530-bcb7-63b2527b9b66
-

சீன-இந்திய எல்லைப்பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய இமயமலைப் பள்ளத்தாக்கில் இரு நாடுகளைச் சேர்ந்த துருப்பினர் கடந்த மாதம் ஒன்றோடு ஒன்று மோதிய நிலையில் சீன ராணுவம் தற்போது அங்கிருந்து தனது கூடாரங்களையும் மற்ற பொருட்களையும் அகற்றியுள்ளதாகத் தகவல்கள் இந்தியத் தரப்பிலிருந்து வெளிவந்துள்ளன.

ஜூன் 15ஆம் தேதியன்று இந்தியாவின் லடாக் மாநிலத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் 28 இந்திய போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அணுவாயுதங்களைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தச் சம்பவம் பதற்றநிலையை அதிகரித்துள்ளது. தனது ராணுவத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, இது குறித்த எந்தப் புள்ளி விவரங்களையும் வெளியிடவில்லை.

அச்சம்பவம் நடந்தது முதல் அந்த இரண்டு நாடுகளும் ராணுவ மற்றும் அரசதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லைப்பகுதியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ வீரர்கள் உயிரிழப்பது இதுவே முதல் முறை. 1962ஆம் ஆண்டில் கடைசியாக எல்லை சர்ச்சை குறித்து இந்தியாவும் சீனாவும் போரில் ஈடுபட்டன.