உடற்குறையுள்ளோர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க உதவி

உடற்குறையுள்ளோர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க உதவி

2 mins read
089a2c7a-a6ed-4dc4-b076-487c5b2cb062
'ஸ்டென்சில்' சாதனத்தின் மூலம் வேட்பாளரின் பெயர் வடிவத்துக்கு நேர்க்கோட்டில் வாக்காளர் ஒருவர் தமது முத்திரையை பதியும் வண்ணம் பார்வைக் குறையுள்ளோருக்கு உதவி வழங்கும் முறையும் நடப்பில் இருக்கும். திரு எட்வின் கூ, 43, இந்த ;ஸடென்சில் சாதனத்தின் உதவியல், தான் விரும்பும் முத்திரையில் வாக்களிக்க முடியும் என்று கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ‌ஷின்தாரோ டே. -

எதிர்வரும் பொதுத் தேர்தலில் உடற்குறையுள்ளோர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க உதவி பெறுவர். எடுத்துக்காட்டாக, எழுந்து நடமாட முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்ேபாருக்கு உதவ நடமாடும் வாக்குச் சாவடியை சம்பந்தப்பட்டவரின் மடியில் வைப்பதன் மூலம் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே வாக்களிக்க வசதி செய்து தரப்படும்.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த நடமாடும் வாக்குச் சாவடி எல்லாப் பக்கத்திலும் தடுப்புப் போடப்பட்டிருப்பதுடன் வாக்காளர் ஒருவர் தமது வாக்கு முத்திரையைப் பதிவதற்கு மட்டும் இடம் விடப்படிருக்கும். இதேபோல், 'ஸ்டென்சில்' சாதனத்தின் மூலம் வேட்பாளரின் பெயர் வடிவத்துக்கு நேர்க்கோட்டில் வாக்காளர் ஒருவர் தமது முத்திரையை பதியும் வண்ணம் பார்வைக் குறையுள்ளோருக்கு உதவி வழங்கும் முைறயும் நடப்பில் இருக்கும்.

பார்வைக் குறையுள்ளோருக்கு உதவும் இந்த முறை, பார்வைக் குறையுள்ளோர் சங்கம் செய்த முறையீட்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் தேர்தல் சட்டப்படி, வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் தங்கள் ைகப்பட வாக்களிக்க வேண்டும். இதற்கு அவர்கள் குடும்ப உறுப்பினரின் உதவியையோ மற்ற எவரின் உதவியையோ நாடக்கூடாது.

வாக்களிப்பு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இது குறித்து கருத்துத் தெரிவித்த தேர்தல் துறை அதிகாரி ஒருவர், "தேர்தலில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் ரகசியக் காப்புறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே, உடற்குறையுள்ளோர் தங்கள் வாக்கின் ரகசியத் தன்மை குறித்து சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை," என்று விளக்கினார். உடற்குறையுள்ளோரின் அறிவுறுத்தலின்படி வாக்குச்சீட்டில் குறியிட அவர்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் உதவுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.