'சில தொகுதிகளில் தோற்றாலும் மசெகவுக்கு பெரிய பாதிப்பில்லை'

'சில தொகுதிகளில் தோற்றாலும் மசெகவுக்கு பெரிய பாதிப்பில்லை'

1 mins read
755325f6-05b0-4d3e-a268-bc88f072c225
பாட்டாளிக் கட்சியின் சில்வியா லிம் (நடுவில்), மெரின் பரேடு குழுத் தொகுதியில் போட்டியிரும் முகம்மது அஸார் அப்துல் லத்தீப் (இடது), யீ ஜென் ஜோங். படம்: இபிஏ -

2011 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அல்ஜுனிட் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சியிடம் தோற்றபோது அக்கட்சி இரு முழு அமைச்சர்களையும் ஒரு மூத்த துணை அமைச்சரையும் இழந்தது.

அந்த வேளையிலும் மசெக நிலைகுலைந்துபோகாமல் மீண்டும் செயல்பட்டதை சுட்டினார் மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் யீ ஜென் ஜோங்.

இந்தத் தகவலை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, பிரதமர் அலுவலக அமைச்சர் லிம் ஹுவி ஹுவா, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சைனுல் அபிதின் ரஷீத் ஆகியோரே அந்த அமைச்சர்கள்.