அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இணையம் வழி வகுப்புகள்: வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்தாகலாம்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இணையம் வழி வகுப்புகள்: வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்தாகலாம்

1 mins read
55bc58b7-0996-4971-9f50-1aae542d4596
வகுப்புகள் முற்றிலும் இணையம் வழியாக நடத்தப்பட்டால் அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

வகுப்புகள் முற்றிலும் இணையம் வழியாக நடத்தப்பட்டால் அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்க முகவை நேற்று (ஜூலை 6) வெளியிட்ட இந்தத் தகவலால், மாணவர்களுக்கான விசா வைத்துக்கொண்டு அமெரிக்காவில் இருக்கும் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கணிசமான வருமானம் பெற்று வந்துள்ளன.

புதிய அறிவிப்பின்கீழ் வரும், F1, M1 விசாக்களை வைத்திருக்கும் மாணவர்கள் தாமாக வெளியேறாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவர் என்று கூறப்பட்டது.

2019ஆம் ஆண்டில் 388,839 F விசாக்களும் 9,518 M விசாக்களும் வழங்கப்பட்டிருந்தன.

2020-2021 ஆண்டுக்கான வகுப்புகள் இணையம் வழியாக நடத்தப்படும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.

பெரும் எண்ணிக்கையிலான வேலை விசாக்களை அமெரிக்கா இவ்வாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்