சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை

சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா பரிசீலனை

1 mins read
2bb7b911-6d00-4fec-ba09-5bf1a5e5d720
இந்தியாவைத் தொடர்ந்து சீன சமூக ஊடக செயலிகளுக்குத் தடை விதிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதன் வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ கூறியுள்ளார். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவைத் தொடர்ந்து சீன சமூக ஊடக செயலிகளுக்குத் தடை விதிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அதன் வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளில் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை என கூறப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற நிறுவனங்களை பயன்படுத்தி உளவு வேலை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு முன்னால் இந்த முடிவை வெளியிட தான் விரும்பவில்லை என்றும் ஆனால் ஆலோசனை நடந்து வருவதாகவும் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.

சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக போர், கொரோனா தொடர்பான சர்ச்சை, ஹாங்காங்கில் சீனாவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஹாங்காங்கிற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதையடுத்து, சமூக வலைத்தளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களைக் கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே இன்னும் சில நாட்களில் ஹாங்காங் சந்தையிலிருந்து வெளியேறவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

டுவிட்டர், டெலிகிராம், ஃபேஸ்புக் நிறுவனங்கள் பயனாளர்களின் விவரங்களை ஹாங்காங் அரசாங்கத்திற்குத் தரக்கூடிய நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்