சுய மை பேனாவால் வாக்குச்சீட்டில் இடப்படும் குறி பல நிமிடங்கள் கழித்து மறைந்துவிடும் என்றும் அதற்கேற்ற தாக வாக்குச்சீட்டு இருக்கும் என்றும் இணையம் வாயிலாகவும் தகவல்களாகவும் பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதாக தேர்தல் துறை தெரிவித்து உள்ளது. அவற்றில் உண்மையில்லை என்றும் சுய மை பேனாவில் இடப்படும் குறி மறையக்கூடியதல்ல என்றும் அது விளக்கியுள்ளது. எல்லாத் ேதர்தல்களுக்கும் வழங்கப்படும் வாக்குச்சீட்டு தான் இம்முறையும் வழங்கப் படுகிறது என்றும் அது கூறி உள்ளது.
மை மறையாது: தேர்தல் துறை விளக்கம்
1 mins read
வாக்களிப்பு நாள் நெருங்கும் காலத்தில் கொவிட்-19 கிருமித் தொற்று நிலைமையின்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் துறை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வெவ்வேறு தகவல் தொடர்பு வழிகளில் வழங்கும். படம்: எஸ்டி -

