உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

1 mins read
c6a6c68a-7e36-474a-b726-09f1410524d3
உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் முக்கிய பங்காற்றி வரும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. படம்: நியூயார்க் டைம்ஸ் -

உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் முக்கிய பங்காற்றி வரும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

இதனால் நிறுவனத்துக்கு கிடைத்து வந்த பெருமளவு நிதியுதவி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முடிவுக்கு பொதுச் சுகாதார நிபுணர்களும் எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார நிறுவனம், போலியோ, தட்டம்மை போன்ற பலதரப்பட்ட நோய்களை எதிர்த்து போராட வழிகாட்டியது.

உலக சுகாதார நிறுவனத்தின் போக்கு சீனாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அந்நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை அவர் நிறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி வருகிறது.

ஆனால் 1948ல் அமைக்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் நிபந்தனையின்படி ஒரு வருடத் திற்குப் பிறகே அமெரிக்கா முழுமை யாக அதிலிருந்து வெளியேற முடியும்.

அதற்குள் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய நிதி வாக்குறுதிகளை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதியுதவியை மற்ற, அவசர உலக சுகாதாரப் பிரச்சினைகளுக்கு திருப்பி விடப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்