யிப் ஹான் வெங்: முதியோருக்கு ஆதரவளிக்கத் திட்டங்கள்

யிப் ஹான் வெங்: முதியோருக்கு ஆதரவளிக்கத் திட்டங்கள்

1 mins read
00152718-3e5a-43a2-9836-4b22c64a27b8
இயோ சூ காங் தனித் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சியின் திரு யிப் ஹான் வெங் (இடது), சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திருவாட்டி கைலா லோ. படங்கள்: மசெக, சிமுக -

மக்கள் செயல் கட்சியின் சார்பில் இயோ சூ காங் தனித் தொகுதியில் போட்டியிடும் அறிமுக வேட்பாளரான 43 வயது திரு யிப் ஹான் வெங், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமது தொகுதியில் உள்ள மூத்த குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்க திட்டங்கள் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களது மன நலனைப் பராமரிப்பது, இளையோருக்கும் மூத்தோருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது, மூத்த பராமரிப்பாளர்களுக்கு வளங்களை நல்கி உதவுவது போன்றவை அந்தத் திட்டங்கள்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் கீழ் மூப்படையும் தலைமுறையினருக்கான குழுமங்களின் முன்னாள் தலைவராக திரு யிப் செய்து வந்த பணியின் தொடர்ச்சியாக இந்தத் திட்டங்களும் அமைந்துள்ளன.

அவருக்கு எதிராக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திருவாட்டி கைலா லோ, 43, போட்டியிடுகிறார். அவர் முன்னாள் சிறைத்துறை அதிகாரியாக இருந்தவர்.

குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் மூத்தோருக்கான தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.