செர்பியாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

செர்பியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வார இறுதியில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெல்கிரேட்டில் நாடாளுமன்றம் முன்பு நடந்த

ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலிசார் இடையே ஏற்பட்ட வன்முறையில் பலர் காயம் அடைந்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர். உலகளவில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 12 மில்லியனைத் தாண்டியது, 500,000த்திற்கும் அதிகமானோர் மாண்டனர். படம்: ஏஎஃப்பி