விக்டோரியாவுடனான எல்லையை மேலும் இரண்டு மாநிலங்கள் மூடின

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரத்­தில் நேற்று கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் நடை­மு­றைக்கு வந்­த­தைத் தொடர்ந்து, மேலும் இரண்டு மாநி­லங்­கள் விக்­டோ­ரி­யா­வு­ட­னான எல்­லையை மூடி­யுள்­ளன.

கடந்த சில நாட்­க­ளாக கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வந்­த­தால், விக்­டோ­ரி­யா­வு­ட­னான எல்­லையை ஏற்­கெ­னவே நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் மூடி­ய­தைத் தொடர்ந்து தற்­போது குவின்ஸ்­லாந்­தும் தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வும் விக்­டோ­ரியாவுடனான எல்­லையை மூடி­விட்­டன.

மெல்­பர்­னைத் தலை­ந­க­ராக கொண்ட விக்­டோ­ரி­யா­வில் புதன் கிழ­மை­யன்று 134 புதிய தொற்று சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டன.

குவின்ஸ்­லாந்து மற்ற மாநில எல்­லையை திறக்க தயா­ராக உள்­ளது என்­றா­லும் வெள்­ளிக்­கி­ழமை மதி­யம் முதல் விக்­டோ­ரி­யா­வில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்­குத் தடை விதித்­துள்­ளது.

மேலும் குவின்ஸ்­லாந்து குடி­யி­ருப்­பா­ளர்­கள் விக்­டோ­ரியா செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று குவின்ஸ்­லாந்து தலை­வர் கூறி­யுள்­ளார்.

அப்­ப­டி­யும் விக்­டோ­ரியா செல்­ப­வர்­கள் மாநி­லத்­திற்­குத் திரும்­பும் போது விடு­தி­களில் 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அதற்­கான செலவை அவர்­களே ஏற்க வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வும் விக்­டோ­ரியா எல்­லையை மூடி­யது.

இந்­நி­லை­யில், மெல்­பர்­னில் நேற்று முதல் மீண்­டும் நடப்­புக்கு வந்­துள்ள முடக்க உத்­த­ர­வால் சுமார் ஐந்து மில்­லி­யன் மக்­கள் வீட்­டி­லேயே அடை­பட்டு கிடக்­கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் முடக்க உத்­த­ரவு கடந்த மே மாதம் முதல் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட தொடங்­கிய பிறகு, சில நாட்­க­ளாக செயல்­பட்டு வந்த உண­வ­கங்­கள், காபி கடை­கள், தங்­கு­வி­டு­தி­கள், சில்­லறை வர்த்­த­கங்­கள் இந்த முடக்க உத்தரவால் மீண்­டும் செயல்­பட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதனால் ஆஸ்திரேலியாவில் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளி­யல் பாதிப்பு பேர­ழி­வாக இருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!