நாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஆஸ்திரேலியா

மெல்பர்ன்: நாடு திரும்பும் குடிமக்களின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா. மெல்பர்ன் உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வரும் வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. புதிய நடைமுறையால் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்புவதற்கு மேலும் சிரமமாகலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.