புளோரிடாவில் மையம் கொண்டுள்ள கொரோனா

வாஷிங்டன்: புளோரிடாவை மையமாகக் கொண்டுள்ள கொரோனா கிருமித்தொற்று ஆறு மாநிலங்களில் பரவி இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளிக் கிழமை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

இதனால் ஓர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் கேளிக்கை பூங்காவை மீண்டும் திறக்கும் திட்டம் ஊசலாடுகிறது.

ஜார்ஜியா, லூசியானா, மோன் டானா, ஓஹையோ, உடா, விஸ் கான்சின் ஆகிய ஆறு மாநிலங்கள் கிருமிப்பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமையிலிருந்து (நேற்று) கேளிக்கை பூங்கா திறக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக் கையில் மட்டும் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வருகை யாளர்கள், ஊழியர்கள் அனை வருக்கும் உடல் வெப்பநிலை பரி சோதிக்கப்படும். முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று வால்ட் டிஸ்னி அறிவித்தது.

இருந்தாலும் தொற்று அதிகரித்து உள்ளதால் கேளிக்கை பூங்காவை திறக்கும் திட்டம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.

கேளிக்கை பூங்காவில் பணி யாற்றும் ஊழியர்கள் உட்பட 19,000 பேர் பூங்கா திறக்கப்படுவதை ஒத்தி வைக்க வேண்டும் என்று வால்ட் டிஸ்னி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்களின் கோரிக்கையை தலைமை செவிமடுப்பதாக இல்லை.

புளோரிடாவில் மட்டும் 11,433 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. புளோரிடாவை மையமாகக் கொண்டு கிருமி பரவுவதை இது புலப்படுத்துவதாக புளோரிடா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்ட நோயாளிகள் எண்ணிக்கை விவரங்கள் தெரியவில்லை. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன்.

இதற்கிடையே லாஸ் ஏஞ்சலசில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 300 ஊழியர்களுக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நான்கு ஊழியர்கள் கிருமித் தொற்றுக்கு பலியானதால் விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த னர்.