முதன் முறையாக பொது இடத்தில் முகக்கவசம் அணிந்த டிரம்ப்

முதன் முறையாக பொது இடத்தில் முகக்கவசம் அணிந்த டிரம்ப்

1 mins read
8057e37e-781d-42fe-af46-3ac9a57b3bde
உலகமே அணிந்த பிறகு திரு டிரம்ப் முகக்கவசங்களை அணியத் தொடங்குகிறார்.(படம்: ராய்ட்டர்ஸ்) -

கொரோனா கிருமிப்பரவலின்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சனிக்கிழமையன்று அந்நாட்டிலுள்ள ராணுவ மருத்துவ வளாகம் ஒன்றில் அணிந்து வந்தார்.

மேரிலாந்து மாநிலத்திலுள்ள வால்ட்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் அவர் சென்று பார்த்தபோது கறுப்பு நீல முகக்கவசம் அணிந்திருந்தார். இதற்கு முன்னதாக முகக்கவசங்களை இதற்கு முன்னதாக அணிய மறுத்த திரு டிரம்ப், அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவரது தனிப்பட்ட விருப்பம் எனத் தெரிவித்தார். ஆயினும் இப்போது அவர், பலர் கூடியுள்ள நிலையில், குறிப்பாக மருத்துவமனையில் இருக்கும்போது முகக்கவசத்தை அணிவது மிக நல்லது எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் இதுரை 134,000 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். திரு டிரம்ப் முகக்கவசத்தை இதுவரை அணிய மறுத்தது பலரால் கடுமையாக குறைகூறப்பட்டு வருகிறது. பல மாதங்களாக மருத்துவ ஆலோசனையைப் புறக்கணித்து முகக்கவசங்களை அணிவதைத் திரு டிரம்ப் அரசியல் விவகாரமாக மாற்றிவிட்டதாக ஜனநாயாகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் பேச்சாளர் தெரிவித்தார்.