விக்டோரியாவில் தொடரும் கிருமிப் பரவல்

மெல்பர்ன்: விக்டோரியா மாநிலத்தில் தொடர்ந்து கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 273 புதிய சம்பவங்கள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை அதிகமுள்ள 2வது நகரமான மெல்பர்னில் சமூக அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆறு வாரம் முடக்கப்பட்டுள்ளது.

“இது மிகவும் ஆபத்தான நேரம். நிலைமையை எதிர்கொண்டு விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்,” என்று விக்டோரியா மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை பதிவான கிருமித் தொற்று சம்பவங்கள் 2வது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இதற்கு முன்பு வெள்ளிக் கிழமை அன்று புதிதாக 288 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வார இறுதியில் 70 வயது முதியவர் கிருமித் தொற்றுக்கு பலியானார்.இவருடன் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம் 108 பேர் இறந்துவிட்டனர்.