கொரோனா கட்டுப்பாடுகளால் அரங்கத்தில் ஆடும் இயந்திரங்கள்

ஜப்பானிலுள்ள விளையாட்டு அரங்கங்களில் 'பேஸ்பால்' விளையாட்டுகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அங்கு ரசிகர்கள் திரள்வதற்குத் தடை உள்ளது. எனவே விளையாட்டாளர்களை உற்சாகப்படுத்துவதற்கு 'ஃபுகொக்க' அணி, ஆடும் இயந்திர மனிதர்களை உருவாக்கியுள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 'நடைபெற்ற நிப்போன் புரோ பேஸ்பால்' போட்டியின்போது அந்த அணிக்காக கிட்டத்தட்ட 20 இயந்திர மனிதர்கள் ஆடின. இந்த இயந்திர மனிதர்களில் சில ஹாக்ஸ் தொப்பிகளை அணிந்து தங்களது அணிகளுக்கு ஆதரவாக கொடிகளை ஏந்தின.

இந்த இயந்திர மனிதர்களின் ஆட்டத்தைக் காட்டும் காணொளிகளைக் கண்ட ரசிகர்கள் சிலர் மகிழ்ந்தனர். ஆனால் வேறு சிலருக்கோ இந்த ஆட்டம் விகாரமாக இருந்ததாகவும் நிஜ ரசிகர்கள் உற்சாகம் கொடுப்பது போல இருக்காது என்றும் வேறு சிலர் இணையத்தளங்களில் கூறி வருகின்றனர்.

வரும் வெள்ளிக்கிழமை முதல் ரசிகர்கள் விளையாட்டரங்கங்களுக்கு நேரில் வரும்வரை இவைகளின் ஆட்டம் தொடர உள்ளது...

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!