கொவிட்-19 விருந்தில் பங்கேற்றவர் மரணம்

நியூயார்க்: கொவிட்-19 கேளிக்கை மற்றும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற டெக்சாசைச்
சேர்ந்த 30வது ஆடவர் கிருமித் தொற்றால் மரணமடைந்தார். கிருமித் தொற்றிய ஒருவர் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பா டு செய்திருந்ததாக சான் ஆன்டானியோவில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனை யின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜே ன் ஆப்பிள்பை சொன்னார். கொவிட்-19 என்பதெல்லா ம் வெ றும் புரளி என்று விருந்து ஏற்பாட்டாளர் நம்பியதாக அவர் கூறினார்.