சலவை இயந்திரத்துக்குள் 3 பூனைகளை வைத்ததாக ஆடவர் கைது

1 mins read
50ff2200-05a4-4548-ae61-bbb2c8d1e862
கெபொங் பகுதியின் சுய சேவை சலவைக் கடை ஒன்றுக்கு, ஆடவர் பூனைகளைக் கொண்டு சென்று இயந்திரத்திற்குள் வைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது. படம்: தி ஸ்டார் ஆன்லைன் -

மலேசியாவில் சலவை செய்யும் இயந்திரத்திற்குள் மூன்று பூனைகளை வைத்துக் கொன்றதாக கூறப்படும் சந்தேக நபர், நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில், கெபொங் பகுதியின் சுய சேவை சலவைக் கடை ஒன்றுக்கு, ஆடவர் பூனைகளைக் கொண்டு சென்று இயந்திரத்திற்குள் வைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.

இதையடுத்து அதே நாளன்று சந்தேக நபர் அதிகாரிகளிடம் சிக்கினார். மூன்று பூனைகளையும் சித்திரவதைக்கும் துன்பத்திற்கும் உட்படுத்தியதன் தொடர்பில் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்