வெளிநாட்டு வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன

வெளிநாட்டு வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன

1 mins read
c418c0b5-9b86-495d-ae12-5806c5dac394
-

வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்கள் பொதுத் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இதையடுத்து நேற்று அவர்களது வாக்குச் சீட்டுகள் பயணப் பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன. பயணப் பெட்டிகளைத் திறந்து அவற்றில் இருந்த வாக்குப் பெட்டிகளைத் தேர்தல் அதிகாரிகள் ஒரு மேசை மேல் அடுக்கி வைத்தனர். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைப் பார்வையிட்டனர். பின்னர், தேர்தல் அதிகாரிகள் வாக்குச் சீட்டுகளை ஒன்றாகக் குவித்தனர். அதைத் தொடர்ந்து கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்