ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் நேற்று மேலும் 87 பேர் மரணம் அடைந்தனர். ஒரே நாளில் இத்தனை மரணங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் இதுவரை 3,797 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்தோனீசியாவில் நேற்று புதிதாக 1,522 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,094ஆக அதிகரித்துள்ளது. இந்தோனீசியாவில் கிருமித்தொற்று மேலும் மோசமடைவதைத் தவிர்க்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

