ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிதாக 275 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55,848 ஆக உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை 48,000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சு வெளியிட்ட தினசரி அறிக்கையில் புதிதாக உயிரிழப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
புதிதாக 393 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, அங்கு மொத்தம் 46,418 பேர் குணமடைந்தனர்.


