தங்கையை கடிக்க வந்த நாயுடன் போராடிக் காப்பாற்றிய 6 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தப் பாசக்கார அண்ணனுக்கு முகத்திலும் தலையிலும் 90 தையல்கள் தேவைப்பட்டது; ஆனால், தங்கைக்கு கீறல்கூட இல்லை.
அமெரிக்காவின் வையோமிங் பகுதியிலுள்ள சயன் நகரில் வசிக்கும் பிரிட்ஜர் என்ற அந்தச் சிறுவன், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று தன் தங்கையைக் கடிக்க வந்த போது, தங்கையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாயை எதிர்த்து நின்று போராடியதாக சிறுவனின் அத்தை நிக்கி வாக்கர் இன்ஸ்டகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதுகுறித்து, “நாய் தாக்கியபோது யாராவது இறந்திருக்க வேண்டும் என்றால், அது தங்கையல்ல, நானாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் நாயுடன் சண்டை போட்டேன்,” என சிறுவன் கூறியது தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக திருவாட்டி நிக்கி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.