நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அவரது உறவினர் எழுதிய புத்தகம், முதல் நாளிலேயே கிட்டத் தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. மேரி டிரம்ப் எழுதிய நூலின் பெயர் "உலகின் ஆபத்தான மனிதரை எப்படி எங்கள் குடும்பம் உருவாக்கியது," என்பதே. திரு டிரம்ப்பின் மூத்த சகோதரர் ஃபிரட்டின் மகளான மேரி ஒரு மனோவியல் நிபுணர். அதிபர் டிரம்ப் அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கை கொண்டவர் என்று நினைவுப் புத்தகத்தில் மேரி டிரம்ப் குறிப் பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் ஒலிப் புத்தகம், மின்னியல் பிரதிகள் உட்பட சாதனை அளவாக மொத்தம் 950,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன என்று அந்த நூலை வெளியிட்ட சைமன் அண்ட் ஷிஸ்டர் நிறுவனம் தெரிவித்தது.
ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையான மேரி டிரம்பின் புத்தகம்
1 mins read
திரு டிரம்ப்பின் மூத்த சகோதரர் ஃபிரட்டின் மகளான மேரி ஒரு மனோவியல் நிபுணர். அதிபர் டிரம்ப் அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கை கொண்டவர் என்று நினைவுப் புத்தகத்தில் மேரி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். -

