இபோலாவுக்கு எதிராக போராட உதவி கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

1 mins read
4371aaee-5fbd-4732-8261-0e3252f580c3
-

நியூயார்க்: காங்கோவில் கட்டுப் படுத்த முடியாமல் பரவும் இபோலா நோய்க்கு எதிராக போராட அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

அந்நோய்க்கு எதிராக போராட நிதி வளமும் குறைந்துள்ளதாக அது மேலும் எச்சரித்தது.

காங்கோவில் 56 இபோலா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 2018ஆம் அண்டில் இபோலா கிருமி பரவியபோது பதிவான சம்பவங்களைவிட அதிகம்.

இபோலா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் சிரமமாகி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்க வட்டாரத் துக்கான டாக்டர் மட்ஷிடிசோ மொயிட்டி தெரிவித்தார்.

கொவிட்-19 பரவல் காரணமாக சுகாதார மிரட்டலாக விளங்கும் இபோலா கிருமியைக் கட்டுப்படுத்து வதில் நாம் மெத்தனமாக இருந்து விடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இபோலாவுக்கு எதிராகப் பேராட இதுவரை 1.75 மில்லியன் டாலர் திரட்டப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் இந்த நிதி ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

தடுப்பூசியைக் கண்டுபிடித்து பரிசோதிக்கவும் கிருமிப் பரவல் தடயங்களைக் கண்டறியவும் சிகிச்சை மற்றும் சுகாதாரக் கல்விக்கும் கூடுதல் நிதி உதவி தேவைப்படுவதாக டாக்டர் மொயிட்டி கூறினார்.

இபோலாவால் குறைவானவர் களே பாதிக்கப்பட்டிருந்தாலும் அது மேலும் அதிவேகத்தில் பரவுவது கவலையளிப்பதாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்தது.