ஈரானில் 25 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று: அதிபர் கவலை

1 mins read
96d76635-3d58-49b3-b2f2-c1a045a1ac74
-

டெஹ்ரான்: ஈரானில் 25 மில்லியன் பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 35 மில்லியன் பேருக்கு கிருமி தொற்றக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி எச்சரித்துள்ளார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுகாதார அமைச்சின் புதிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

ஈரானின் மக்கள்தொகை எண்பது மில்லியன். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மட்டுமே கொரோனா கிருமிப் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.