விக்டோரியாவில் 217 பேர் பாதிப்பு

விக்டோரியாவில் 217 பேர் பாதிப்பு

1 mins read
c2403441-0f7c-4834-b960-7ee5ed2d4f85
விக்டோரியா மாநிலத்தின் கிழக்கு மெல்பர்ன் நகரில் உள்ள ஃபில்ட்ஸ்ராய் தோட்டத்தில் முகக்கவசம் அணிந்தவாறு உலா வரும் மக்கள். படம்: ஏஏபி -

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான மாநிலமான விக்டோரியாவில் நேற்று சனிக்கிழமை அன்று மட்டும் புதிதாக 217 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளன்று புதிய உச்சமாக 428 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பாதிப்பால் மேலும் இருவர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரு தெரிவித்தார். இதனால் விக்டோரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் 15 பேர் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர்.