டெட்ராய்ட்: வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குறுக்கிடுவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
புலனாய்வுத் துறையின் விளக்கக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரசாரத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் திரு ஜோ பைடன் பேசினார். தேர்தலில் தலையிட சீனாவும் முனைப்புக் காட்டி வருகிறது என்றார் அவர்.
"எனக்கு நன்றாகத் தெரிகிறது. நமது தேர்தல் நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்யர்கள் முயற்சி செய்து வருகின்றனர்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட்டால் அதற்குரிய விலையை ரஷ்யா கொடுத்தாக வேண்டும் என்று தான் வெற்றி பெற்ற பிறகு எடுக்கப்போகும் நடவடிக்கையை பற்றி ஜோ பைடன் குறிப்பிட்டார்.

