புதிய உச்சம்: ஒரே நாளில் 260,000 பேருக்கு தொற்று

உல­கம் முழு­வ­தும் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 24 மணி நேரத்­தில் கிட்­டத்­தட்ட 260,000 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது.

கொள்ளைநோய் பர­வத் தொடங்­கி­யது முதல் ஒரே நாளில் 259,848 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை என்ற உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

இதற்கு முதல் நாள் வெள்­ளிக்­கி­ழமை பதி­வான 237,743 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களே ஆக அதி­கம் என்­றி­ருந்த நிலை­யில் புதிய எண்­ணிக்கை அதை­யும் மிஞ்­சி­விட்­டது.

மேலும், ஒரே நாளில் கால் மில்­லி­யன் பேருக்கு மேல் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருப்­ப­தும் இதுவே முதல் முறை என்­றது நிறு­வ­னம். அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தியா, தென்­னாப்­பி­ரிக்கா ஆகிய நாடு­களில் பதி­வான நோய்த்­தொற்று எண்­ணிக்கை ஆக அதி­க­மாக இருந்­ததே உல­க­ள­வி­லான எண்­ணிக்கை வேக­மாக உய­ரக் கார­ணம் என்­றது அது.

வெள்­ளிக்­கி­ழமை வரை­யி­லான நில­வ­ரப்­படி 100 மணி நேரத்­தில் ஒரு மில்­லி­யன் பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வில் 71,484, பிரே­சி­லில் 45,403, இந்­தி­யா­வில் 34,884, தென்­னாப்­பி­ரிக்­கா­வில் 13,373 என்று புதி­தாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

புதிய எண்­ணிக்கை மூலம் இந்­தி­யா­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஒரு மில்­லி­யன் பேர் ஆயி­னர். அதற்கு முதல் நாளான வியா­ழக்­கி­ழமை பிரே­சி­லின் தொற்று எண்­ணிக்கை இரண்டு மில்­லி­ய­னைக் கடந்­தது.

மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யும் சாதனை அள­வைத் தொட்­டி­ருக்­கிறது. மே 10ஆம் தேதிக்­குப் பிறகு ஒரே நாளில் 7,360 பேர் உயி­ரி­ழந்­த­தாக சனிக்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது. ஜூன் மாதம் முழு­வ­தும் சரா­ச­ரி­யாக தின­மும் 4,600 பேர் உயி­ரி­ழந்த நிலை­யில் இந்த மாதம் அந்த விகி­தம் 4,800ஆக அதி­க­ரித்­து­விட்­டது.

மேலும், அன்­றைய கணக்­குப்­படி மொத்­த­மாக பாதிக்­கப்­பட்­டோர் எண்ணிக்கை 14 மில்­லி­ய­னைக் கடந்து 14.3 மில்­லி­யா­ன­கி­விட்­டது. கிரு­மிப் பர­வத் தொடங்­கிய ஏழு மாதங்­களில் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்­கை­யும் 600,000க்கும் மேல் அதி­க­ரித்­து­விட்­டது. இது­வரை மாண்­டோ­ரில் கால்­வா­சிப் பேர் (25 விழுக்­காடு) அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்­த­வர்­கள்.

அமெ­ரிக்­கா­வின் பல மாநி­லங்­களில், குறிப்­பாக தென்­மா­நி­லங்­களில் கிரு­மிப் பர­வல் வேகம் அதி­க­மாக உள்­ளது. முகக்­க­வ­சம் அணிய வேண்­டிய கட்­டா­யத்­தை­யும் முடக்­கத்­தை­யும் தொடக்­கத்­தி­லேயே செய்­யத் தவ­றி­ய­தால் அம்­மா­நி­லங்­கள் இப்­போது பெரும் பாதிப்­பை சந்­தித்து வரு­கின்­றன.

ஃப்ளோரிடா, டெக்­சஸ், அரி­ஸோனா ஆகிய மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்­று­க­ளின் எண்­ணிக்கை பல­ம­டங்கு பெருகி வரு­கிறது. இவற்­றுள் ஃப்ளோரி­டா­தான் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு உள்­ளது. சனிக்­கி­ழமை மட்­டும் இம்­மா­நி­லத்­தில் 10,000 பேருக்கு புதி­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்ய்­ப­பட்­ட­து­டன் 90 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

மொத்­த­மாக, அந்த மாநி­லத்­தில் 337,000 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. 5,000 பேர் வரை மாண்­டு­விட்­ட­னர்.

இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் கிருமிப் பரவல் வேகம் அதிகரிப்பு