கோத்தகினபாலு: பல மனித உயிர்களைப் பறித்து வந்ததாக நம்பப்படும் நான்கு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று, பொறியில் அகப்பட்டு இறந்தது.
மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள கலபாக்கான் பகுதிவாசிகள் பலரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் 350 கிலோ எடையுள்ள முதலையின் உடல், நேற்று முன்தினம் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலையால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல நடந்து வந்ததை அடுத்து, அதைச் சிக்க வைப்பதற்காக அதிகாரிகள் பொறிகள் வைத்தனர்.
முதலை அகப்பட்டதும் முதலையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலையின் உடலை வெட்டித் திறக்க வேண்டும் என்று குடும்பத்தார் கேட்டுக்கொண்டனர். முதலையின் வயிற்றில் மனிதக் கைகள் இருந்தன. அவை பலியானவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

