மலேசிய இந்திய பெண்ணுக்கு கௌரவம்

மலேசிய இந்திய பெண்ணுக்கு கௌரவம்

1 mins read
5cde3649-73b4-4e14-b1bf-6fe156dc76a0
-

பிரபல மலேசிய இந்திய யூடியூப் பிரபலம் எஸ். பவித்ராவை மலேசியாவின் ஈப்போ நகரம் கௌரவித்திருக்கிறது.

ஈப்போவின் 'சின்னமாக' 28 வயது பவித்ராவை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருதை இதன் மேயர் ருமைஸி பகரின் அவருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சமையல் குறிப்பு காணொளிகளைப் பதிவேற்றம் செய்து பிரபலமடைந்த திருமதி பவித்ரா, புந்தோங் பகுதியில் பிறந்தவர் என்பதை திரு ருமைஸி சுட்டினார்.

இந்த விருது மிஷல் இயோ என்ற நடிகைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. விருது கிடைத்ததில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தம்மை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் திருமதி பவித்ரா கூறினார்.