மலேசியாவில் மீண்டும் உத்துசான்; மாமன்னர் பாராட்டு

மலேசியாவில் மீண்டும் உத்துசான்; மாமன்னர் பாராட்டு

1 mins read
4bd0e87a-abf0-4138-bc83-952a7a2b1668
-

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப்பழமையான மலாய் மொழி நாளேடான 'உத்துசான் மலேசியா' ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கடைகளுக்குத் திரும்பியிருக்கிறது.கடந்த அக்டோபர் மாதம் அந்த நாளேடு நிறுத்தப்பட்டது.

'நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை' என்ற புதிய தாரக மந்திரத்துடன் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன் துணை வெளியீடான 'கோஸ்மோ'வும் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

'மீடியா மூலியா' எனும் புதிய நிர்வாகத்தின் கீழ் இரண்டு இதழ் களும் செயல்படும்.

இந்த நிறுவனம், 'தொழில் அதிபர் சையது முக்தார் அல்புகாரிக்குச் சொந்தமான 'அரோரா மூலியா' நிறுவனத்தின் கீழ் இயங்கும். இதனால் 'உத்துசான் மலேசியா', 'கோஸ்மோ' ஆகிய இரண்டும் திரு சையது முக்தார் அல்புகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு இவை இரண்டும் அம்னோவின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன. ஒன்பது மாதங் களுக்கு முன்பு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இரண்டு இதழ்களும் நிறுத்தப்பட்டன.

இதனால் 800 பேர் வேலை இழக்க நேரிட்டது.

திரு சையது முக்தார், மலேசியாவின் ஆகப்பெரிய ஊடக நிறுவனமான 'மீடியா பிரிமா'விலும் 31.22 விழுக்காடு பங்கை வைத்துள்ளார். மீடியா பிரிமாவின் கீழ் 'டிவி3', 'என்டிவி7', '8டிவி', 'டிவி9' ஆகிய நான்கு முன்னணி தனியார் தொலைக்காட்சி ஒளி வழிகள் செயல்படுகின்றன. இந்த 'மீடியா பிரிமா', 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்'ஸின் தாய் நிறுவனமாகும்.

'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்' நிறுவனம், முன்னணி நாளேடு களான 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்', 'பெரித்தா ஹரியான்', 'ஹரியான் மெட்ரோ