'ஜமா இஸ்லாமியா' தலைவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை

1 mins read
46864d53-2991-4b4d-88fe-c14b06c517df
பயங்கரவாத அமைப்பின் விஜயாந்தோவின் புகைப்படத்தையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் இந்தோனீசிய போலிசார் காட்டுகின்றனர். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் பயங்கரவாத அமைப்பான ஜமா இஸ்லாமியாவின் உயர்மட்ட தலைவருக்கு இந்தோனீசியா நீதிமன்றம் நேற்று ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2009ஆம் ஆண்டில் ஜமா இஸ்லாமியாவின் தலைவராக 56 வயது பாரா விஜயாந்தோ செயல் பட்டார்.

இந்தோனீசியாவில் சிரியாவில் போரிடுவதற்காக ஆட்களைச் சேர்த்து பயிற்சி அளித்து நிதி திரட்டிய அவர், பயங்கரவாதச் செயலில் ஈடுபட தூண்டியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் இவரையும் இவரது மனைவியையும் போலிசார் கைது செய்தனர்.

"பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் மற்றவர்களை அவர் தூண்டியுள்ளார்," என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பான சுதந்திர சிரியாவின் ராணுவம், ஜபாட் அல்-நுஸ்ரா ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற் காக பாட்ரியா, அஸ்காரி என்ற இரு போராளிகளை விஜயாந்தோ 2012ல் சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தோனீசியாவைச் சேர்ந்த மற்ற போராளிகளும் சிரியாவுக்குச் செல்ல சாத்தியமான வழிகளைக் கண்டறியவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இரு போராளிகளும் இந்தோனீ சியா திரும்பிய பின் தங்கள் போர் அனுபவங்களைக் கொண்டு தாயகத்திலும் இஸ்லாமியா நாட்டை உருவாக்குவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது என்று அரசு தரப்பினர் தெரிவித்தனர்.