விக்டோரியாவில் 374 பேருக்கு கிருமித்தொற்று; சம்பள உதவித் தொகையை நீட்டிக்க அரசு முடிவு

மெல்பர்ன்: கொவிட்-19 சூழலில் ஊழியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட சம்பள உதவித் திட்டம் செப்டம்பருக்கு மேல் நீட்டிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால் சம்பள உதவித் தொகை முன்பிருந்ததைவிட குறைக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.

கொரோனா கிருமிப் பரவல் நெருக்கடிகளுக்கு இைடயே பொருளியலைத் தூண்டும் நடவடிக்கை களின் ஒரு பகுதியாக வேலையில் ஊழியர்களை நீட்டிக்கச் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் வர்த்தகங்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றியுள்ளது என்று கேன்பராவில் பேசிய திரு மோரிசன் குறிப்பிட்டார்.

இதில் செய்யப்பட்ட திருத்தம் சரிந்து கிடக்கும் பொருளியலை மீட்பதற்கான முதல் படி என்றார் அவர்.

ஆஸ்திரேலிய பொருளியலை கிருமித்தொற்று பாதித்து வரும் நிலையில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.4 விழுக்காடுஅதிகரித்தது.

இந்த நிலையில் வேலையின்மையை குறைக்க ஊழியர்களுக்கான உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி ஊழியர்களை வேலையில் தக்க வைத்துக்கொள்ள சிரமப்படும் நிறுவனங்களுக்கு இரு வாரங்களுக்கு ஒரு முறை ஊழியர்களுக்கு தலா 1,500 ஆஸ்திரேலிய டாலர் உதவித் தொகையை அரசு வழங்கி வரு கிறது. செப்டம்பருக்குப் பிறகு உதவித் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும்.

முழு நேர ஊழியருக்கு 1,200 ஆஸ்திரேலிய டாலராகவும் வாரத்திற்கு இருபது மணி நேரத்துக்கு குறைவாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 770 ஆஸ்திரேலிய டாலராகவும் குறைக்கப்படும்.

ஜனவரியிலிருந்து மார்ச் வரையில் இவை, முறையே 1,000 மற்றும் 650 ஆஸ்திேரலிய டாலராக மேலும் குறைக்கப்படும்.

இதற்கிடையே விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 374 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவர் கிருமிக்குப் பலியாகியுள்ளனர்.

நூறு வயதில் இருந்த மாதும், 90,80களில் இருந்த இரு பெண்களும் கிருமித் தொற்றால் உயிரிழந்தனர் என்று விக்டோரியா மாநிலத்தின் முதல்வர் டேனியல் ஆண்ட்ருஸ் மெல்பர்னில் நடை ெபற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த மாநிலத்தில் மட்டும் மொத்தம் 6,300 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, நாட்டின் மொத்த தொற்று சம்பவங்களில் பாதியாகும்.