நஜிப் $550 மில்லியன் கூடுதல் வருமான வரி செலுத்த உத்தரவு

2 mins read
91e8aa92-a1db-4a22-955f-8c2ea636f4ad
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். படம்: ஏஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் கூடு­த­லாக 1.69 பில்­லி­யன் ரிங்­கிட் (S$550 மில்­லி­யன்) வரி செலுத்த வேண்­டும் என்று கோலா­லம்­பூர் உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சாட்­சி­யங்­களை விசா­ரிக்­கா­மல் தாக்­கல் செய்­யப்­பட்ட ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

கடந்த 2019 ஜூன் 25ஆம் தேதி­யன்று, மலே­சிய அர­சாங்­கம் உள்­நாட்டு வரு­வாய் வாரி­யம் மூலம், நஜிப் மீது மொத்­தம் 1.69 பில்­லி­யன் ரிங்கிட் செலுத்த வேண்­டும் என்­றும் தீர்ப்­ப­ளித்த நாளி­லி­ருந்து ஆண்­டுக்கு 5 விழுக்­காடு வட்டி, அத்­து­டன் செல­வு­கள் மற்­றும் நீதி­மன்­றத்­தால் பரிந்­து­ரைக்­கப்­படும் பிற நிவா­ர­ணங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்றும் வழக்கு தொடுத்­தது.

மேலும் அத்­தொ­கையை செலுத்த நஜிப்­பிற்கு 60 நாட்­கள் அவ­கா­சம் வழங்­கப்­பட்­ட­போ­தும் அவர் அதை செலுத்த தவ­றி­விட்­ட­தா­க­வும் மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதே ஆண்டு ஜூலை மாதம் நஜிப் வரி மதிப்­பீடு தொடர்­பான மேல்­மு­றை­யீட்­டிற்கு விண்­ணப்­பம் செய்­தி­ருந்­தார். ஆனால் அந்த விண்­ணப்­பம் நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது.

இத­னை­ய­டுத்து, அவர் மீதான வழக்­கில் தாக்­கல் செய்­யப்­பட்ட ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் விசா­ரணை நடை­பெற்­றது.

1எம்­டிபி தொடர்­பான ஐந்து ஊழல் வழக்­கு­க­ளை­யும் நஜிப் எதிர்­நோக்கியுள்ளார்.

அதில் முதல் வழக்கான 1எம்­டி­பி­யின் முன்­னாள் துணை நிறு­வ­ன­மான எஸ்­ஆர்­சி­யின் நிதியை முறை­கே­டாக பயன்­ப­டுத்­திய வழக்கு விசா­ரணை கடந்த மாதம் முடி­வ­டைந்­தது. இந்த வழக்­கில் வரும் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

பிப்­ர­வ­ரி­யில் ஏற்­பட்ட அதிரடி அர­சி­யல் மாற்றத்தைத் தொடர்ந்து, நஜிப்­பின் அம்னோ கட்சி ஆளும் நிர்­வா­கத்­திற்­குத் திரும்­பி­யுள்­ளது, தற்­போது நடை­பெற்று வரும்

1எம்­டிபி ஊழல் வழக்­கு­கள் மற்­றும் விசா­ர­ணை­கள் குறித்து கவ­லை­யைத் தூண்­டி­யுள்­ளது.