ஆஸ்திரேலியாவில் உச்சமடைய தொடங்கியுள்ள கிருமித்தொற்று

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புதி­தாக 502 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­ய­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

எனவே கொவிட்-19 கண்­ட­றி­யப்­பட்ட நான்கு மாதங்­க­ளுக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிரு­மித்­தொற்று உச்­ச­ம­டையத் தொடங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு முன்­னர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரே நாளில் 459 பேர் தொற்­றுக்கு ஆளா­னதே அதிகமாக இருந்­தது.

நேற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோர் (484 பேர்) விக்­டோ­ரியா மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். ஆஸ்திரேலியாவில் மொத்தம் 13,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 128 பேர் மாண்டனர்.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் முதன்­மு­றை­யாக மெல்­பர்ன் நகர பொது இடங்­களில் மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் ‘மக்­கள் நட­வ­டிக்­கை­யில் மேலும் மாற்­றங்­கள் வேண்­டும்’ என்று விக்­டோ­ரியா மாநில தலை­வர் ஆண்ட்­ரூஸ் கூறி­னார்.

கடந்த இரண்டு வாரங்­களில் கொவிட்-19 உறுதி செய்­யப்­பட்ட 10ல் ஒன்­பது பேர், தங்­க­ளுக்கு அறி­கு­றி­கள் தென்­பட்­ட­தற்­கும் கொரோனா பரி­சோ­தனை முடி­வுக்காக காத்­தி­ருந்த கால­கட்­டத்­திற்­கும் இடையே தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை என்று பகுப்­பாய்வு ஒன்று தெரி­விப்­ப­தைச் சுட்­டிய அவர் இவ்­வாறு கூறி­னார்.

மேலும் மெல்­பர்­னில் கிரு­மிப் பர­வல் எவ்­வாறு அதி­க­ரித்­தது என்­பது குறித்த விசா­ர­ணை­யில், வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பி­ய­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தப் பயன்படுத்­தப்­பட்ட தங்­கு­ வி­டு­தி­களில் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பாடு­கள் மீறப்­பட்­ட­தாக தெரிய வந்­துள்­ளது.

இதற்­கி­டையே நியூ சவுத் வேல்­சில் புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து, அம்­மா­நில தலை­வர் கிளா­டிஸ் பெரெ­ஜிக்­லி­யன், இனி வரும் வாரங்­கள் மிக­வும் நெருக்­க­டி­யான காலகட்டமாக இருக்­கும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!