கட்டுப்பாடுகளை பின்பற்ற எதிர்ப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிருமிப் பரவல் மோசமடைந்து வரும் நிலையிலும் சமூக இடைவெளி உத்தரவைப் பின்பற்றுவதற்கு மூன்றில் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்துவதைவிட பொருளியலை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் கலந்துகொண்ட 60.6 விழுக்காட்டினர் தெரிவித்து உள்ளனர். இந்தோனீசிய தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று சுமார் 1,200 பேரிடம் தொலைபேசி வாயிலாக ஜூலை 13-16 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வை மேற் கொண்டது. நேற்று ஆக அதிகமாக 139 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து மாண் டோர் எண்ணிக்கை 4,459ஆக உயர்ந்துள்ளது. 91,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.