தென்கொரியாவின் டேகு நகரில் கிருமித்தொற்று 27 மடங்கு அதிகரிப்பு

சோல்: தென்­கொ­ரி­யா­வின் டேகு நக­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு ஒன்­றில், 13 பேரில் ஒரு­வ­ருக்கு கொரோனா கிரு­மி­யின் ஆண்ட்­டி­பாடி எனும் நோய் எதிர்ப்பு அணுக்­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அங்கு கிரு­மிப் பர­வல் தற்­போ­துள்­ள­தைக் காட்­டி­லும் 27 மடங்கு அதி­கம் இருக்­க­லாம் என்­கிறது ஆய்வு.

மே 25ஆம் தேதிக்­கும் ஜூன் 5ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வின்­படி, 2.5 மில்­லி­யன் மக்­கள்­தொகை கொண்ட டேகு நக­ரில் சுமார் 185,290 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

கொரோனா பரி­சோ­தனை செய்து­கொள்­ளாத 198 பேரி­டம் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது அவர்­களில் 15 பேருக்கு அதா­வது 7.6 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

ஜூன் 5ஆம் தேதி நில­வ­ரப்­படி டேகு நக­ரில் 6,886 உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யி­ருந்­த­தாக கொரிய மருத்­துவ அறி­வி­யல் சஞ்­சி­கை­யில் வெளி­யான இந்த ஆய்­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, டேகு நக­ர­வா­சி­கள் சுமார் 3,300 பேருக்கு நோய் எதிர்ப்பு அணு பரி­சோ­தனை செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக கொரிய நோய்த் தொற்று கட்­டுப்­பாட்டு மையத் தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.