தனிமைப்படுத்தலின்போது உணவகத்திற்கு சென்ற பெண்ணிற்குத் தொற்று உறுதி

1 mins read
911e326f-bb33-4d4d-8df9-6134d957897d
மலேசியத் தலைநகர் கோலாலமபூரில் முகக்கவசம் அணிந்தவாறு செல்லும் மக்கள். படம்: இபிஏ, அகமது யுஸ்னி -

ஈப்போ: மலே­சி­யா­வில் கொவிட்-19 தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வின் போது உண­வ­கத்­திற்­குச் சென்று உண­வ­ருந்­திய பெண்­ணிற்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

சென்ற 4ஆம் தேதி வெளி­நாட்­டில் இருந்து மலே­சி­யா­விற்­குச் சென்ற 72 வய­தான அப்­பெண் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அப்­போது அவ­ருக்கு இளஞ்­சி­வப்பு பட்டை ஒன்று மணிக்­கட்­டில் கட்­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் கடந்த ஜூலை 6ஆம் தேதி அப்­பெண்­மணி மெரு ராயா­வில் உள்ள உண­வ­கத்­தில் உண­வ­ருந்­திய புகைப்­ப­டம் பல­ரது கண்­ட­னத்­தைப் பெற்­றது. இந்­நி­லை­யில் தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ர­வின் 13ஆம் நாளில் அவ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கடந்த 17ஆம் தேதி அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக தி ஸ்டார் செய்தி கூறு­கிறது. அவ­ரது மக­னுக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.