விசா மோசடி விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்காவில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் அமெரிக்க விசா வைத்துள்ள சில சீன நாட்டவர்களிடம் அமெரிக்க மத்திய புலானய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீன ராணுவத்துடனான தொடர்பை மறைத்து அவர்கள் விசா பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க நீதித் துறை இந்தத் தகவலை வெளியிட்டது.

அமெரிக்காவின் அதிரடி நேர்காணல் நடவடிக்கை, உலகின் இரு பெரும் பொருளியல் நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அறிவுசார் சொத்துகள் திருடப்படுவதாகக் கூறி அண்மையில் ஹுயூஸ்டனில் உள்ள தூதரகத்தை மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது.

மேலும் ராணுவத்துடன் தொடர் புள்ள ஒருவர் மோசடியாக ‘விசா’ பெற்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகத்தில் ஒளிந் திருப்பதாகவும் அெமரிக்கா அண் மையில் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் மேலும் பலர் சீன ராணுவத்துடன் நேரடி தொடர்பு அல்லது அதில் உறுப்பினராக இருப்பதை மறைத்து சீன நாட்டவர்கள் விசா வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதனை பெய்ஜிங் மறுத்துள்ளது.

இந்த நிலையில் 25க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களில் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விவரங்களைக் கேட்டு விசாரித்து வருகின்றனர். “சீன ராணுவத்தில் உறுப்பினர்களாக உள்ள இவர்கள் உண்மையை மறைத்து ஆய்வாளர்களாக விசா பெற்றுள்ளனர்,” என்று அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியுள்ளது.