பயணிகளின் கொரோனா சிகிச்சை செலவை ஏற்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்

விமானப் பயணத்தின்போது கொரோனா கிருமியால் பாதிக்கப்படும் பயணிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா கிருமி உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், விமானப் பயணங்கள் பெரிதும் முடங்கியுள்ளன. 

பல்வேறு கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நெறிமுறைகளுடன் சில விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. 

ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக விமானப் பயணங்களை மேற்கொள்ள மக்களிடையே தயக்கம் உள்ளது. 

இந்நிலையில் விமானப் பயணத்தின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பயணிகளின் மருத்துவ செலவுக்காக $241,760 (150,000 யூரோ) வரை அந்நிறுவனம் வழங்க உள்ளது. 

மேலும் தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி சுமார் $161 (100 யூரோ) ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாத இறுதி வரை எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வோருக்கு இந்த சலுகை உடனடியாக பயனுள்ளதாக இருக்கும். 

அவர்கள் விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!